பித்தம், தலை சுற்றல், வாந்தி நீங்க கசாயம்!! இவ்வாறு செய்யுங்கள்!!

Photo of author

By Selvarani

பித்தம், தலை சுற்றல், வாந்தி நீங்க கசாயம்!! இவ்வாறு செய்யுங்கள்!!

உடலில் கல்லீரலில்தான் பித்த நீர் சுரக்கப்படுகிறது. இது அதிகப்படியான பித்த நீரை சுரக்கும்போதுதான் தலை வலி, வாந்தி , மயக்கம் என உண்டாகிறது. இந்த பித்த நீரானது செரிமானத்திற்கு உதவும் கல்லீரலையே பாதித்துவிடும். எனவே அத்தகைய பித்த நீரை முற்றிலும் குணமாக என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கொத்தமல்லி
2. சீரகம்
3. இஞ்சி
4. பனங்கற்கண்டு
5. எலுமிச்சை பழம்

செய்முறை:
முதலில் கொத்தமல்லி மற்றும் சீரகத்தை நன்கு வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரைத்த கலவை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதில் தேவையான அளவு பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்து கால் டம்ளர் அளவு தண்ணீர் வந்தவுடன் வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

இதனை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்து வரவையில் பித்தம் சரியாகி தலைவலி மற்றும் வாந்தி வருவதை முற்றிலும் குணமாக்கும்.

இதில் சேர்க்கப்பட்ட பொருளின் நன்மைகள்:

1. கொத்தமல்லி- கொத்தமல்லியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை இருப்பதால், உணவில் கட்டாயம் சேர்த்து கொள்வது நல்லது.

2. சீரகம்- சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு நல்ல மூலமாகும். தினமும் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது.

3. இஞ்சி- இஞ்சி உடலில் இரத்த ஓட்டம் சீராக உதவும். பசி உணர்வை அதிகரிக்கும். ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

4. பனங்கற்கண்டு- இதிலிருக்கும் இரும்புச்சத்து, உடல் பித்தத்தை நீக்குகிறது.

5. எலுமிச்சை பழம்- தினமும் காலையில் எலுமிச்சை நீரைக் குடிப்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை உகந்த முறையில் செயல்பட ஊக்குவிக்கிறது. ‌மேலும் நோய்களைத் தடுக்கிறது. எலுமிச்சையில் உள்ள அதிக வைட்டமின் சி சளியைத் தடுக்கிறது .