மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

0
122
#image_title

மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

உடலை இளமையாக வைத்திருக்கும் காயகற்ப மூலிகை வகையைச் சேர்ந்தது தூதுவளை, இதன் வேர், இலை, பூ காய் என இதன் அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பயன்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்து பாலில் போட்டுக் காய்ச்சி குடித்தால், நோயின் தொந்தரவு குறையும்.

தூதுவளை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும். இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தூதுவளை குழந்தைகளுக்கு சளி, இருமல் , காய்ச்சல் மேலும் சுவாச கோலாரு அதன் மூலமாக வரக்கூடிய நோய்களை எல்லாம் தீர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்த மூலிகை. இதன் மருத்துவம் குணங்களை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. தூதுவளை
2. சின்ன வெங்காயம்
3. பூண்டு
4. சீரகம்
5. சுக்கு
6. திப்பிலி
7. மிளகு
8. கருவேப்பிலை
9. உப்பு

செய்முறை:

தூதுவளை இலை மற்றும் தண்டுடன் சேர்த்து தேவையான அளவு எடுத்து கொள்ளவும். இதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சேர்த்து கொள்ளவும். சின்னவெங்காயம் இரத்தத்தை சுத்தம் செய்ய கூடிய தன்மை கொண்ட என்பதால் இதனையும் சேர்க்கவும். மேலும் பூண்டு உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கொழுப்புக்களை நீக்க கூடிய தன்மை உள்ளதால் இதனையும் சேர்க்கவும்.

தேவையான அளவு சீரகம் சேர்த்து கொள்ளவும். அகத்தை அழகு செய்ய கூடிய பெரிய வகை மூலிகை சீரகம். மேலும் தொல் நீக்கி சுத்தம் செய்த சுக்கு தூள் அரை தேக்கரண்டி சேர்க்கவும். மேலும் அடுத்த படியாக சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தக்கூடிய மிளகு மற்றும் திப்பிலி பொடி சேர்க்கவும். இதனுடன் இரும்பு சத்து அதிகம் உள்ள கருவேப்பிலை சேர்க்கவும். இக்கலவை அனைத்தையும் 10-15 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.

அடுப்பை அணைத்துவிட்டு வேக வைத்த கலவையை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை வடிக்கட்டி வைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் இதனை அடுப்பில் வைத்து நன்கு வேக வைக்கவும். மீண்டும் இதனை வடிகட்டி உப்பு சேர்த்து இக்கசாயத்தை பருகி வருகையில் மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா குணமாகும்.

 

 

 

author avatar
Selvarani