டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐய்யர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

Photo of author

By Parthipan K

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐயர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

இந்திய அணியானது டி20 உலக கோப்பைக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

டி20யின் முதல் போட்டி  26 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் அடுத்து இரண்டாவது போட்டி அக்டோபர் 2ம் தேதி கவுகாத்திலும், மூன்றாவது போட்டி அக்டோபர் 4ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக தீபக் ஹூடா தொடரிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐய்யர் இடம் பிடித்துள்ளார், இதுபோல் ஹர்திக் பாண்டாயாவுக்கு பதில் ஷபாஸ் அகமது உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.