சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

Photo of author

By Divya

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

பஞ்சமி திதி அன்று மட்டுமே இந்த பரிகாரம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பித்தளை தாம்பூலத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளவும். இதை பூஜை அறை தரையில் வைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்கவும்.

அடுத்து அந்த தாம்பூலத்தில் புதிதாக 5 அகல் விளக்கு வைக்கவும். அந்த அகலிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு கொள்ளவும்.

அடுத்து இந்த விளக்கு ஏறிய நாம் நல்லெண்ணெய் உபயோகிக்க வேண்டும். 5 அகல் விளக்கிலும் நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு விளக்கிற்கும் 2 திரி போட்டு தீபம் ஏற்றவும்.

அடுத்து ஒரு தட்டில் கற்பூரம் போட்டு ஏரிய விட்டு விளக்கிற்கு ஆராதனை செய்து பணம், நகை வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் பஞ்சமி திதியில் இந்த விளக்கை ஏற்றுவது நல்லது. இவ்வாறு மாதம் இருமுறை என்று தொடர்ந்து செய்து வந்தால் சகல செல்வ வளமும் கிடைக்கும்.