மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் புதிய படத்தின் கதாநாயகி இவரா? லேட்டஸ்ட் அப்டேட்!

Photo of author

By Vinoth

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் புதிய படத்தின் கதாநாயகி இவரா? லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார்.

பாகுபலி வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பல்நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படம் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகி 11 வாரங்கள் ட்ரண்ட்டிங்கில் இருந்தது. இதுவரை எந்தவொரு படத்துக்கும் அப்படி நடந்ததில்லை.

இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு இந்த படம் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் தேர்வாகவில்லை. ஆனாலும் மனம் தளராத இயக்குனர் ராஜமௌலி ‘பரிந்துரை’ பிரிவில் RRR படத்தை 15 பிரிவுகளில் ஆஸ்கருக்கு அனுப்பியுள்ளாராம். அனுப்பியதோடு மட்டும் இல்லாமல் படத்தை ப்ரமோட் செய்ய இப்போது அமெரிக்காவில் முகாமிட்டு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு தன்னுடைய படங்கள் அனைத்தையும் திரையிட்டு வருகிறார்.

ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படம் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாக உள்ளதாம். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.