”எங்கள மன்னிச்சிடுங்க… ரொம்ப மோசமா விளையாடிட்டோம்…” வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஆதங்கம்!

0
98

”எங்கள மன்னிச்சிடுங்க… ரொம்ப மோசமா விளையாடிட்டோம்…” வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஆதங்கம்!

வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்று போட்டியில் தோற்று உலகக்கோப்பையை விட்டே வெளியேறியுள்ளது.

ஹோபார்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 146 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்தது. அதன் பின்னர் ஆடிய அயர்லாந்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது. இதன் மூலம் தகுதிச் சுற்றில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் இந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆகி ஆண்டுகளில் டேரன் சமி தலைமையில் இரண்டு முறை டி 20 கோப்பையை வென்றுள்ளது. பல திறமையான மேட்ச் வின்னிங் வீரர்களைக் கொண்டிருந்தாலும், சர்வதேச போட்டிகள் என்று வரும் போது வெஸ்ட் இண்டீஸ் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் “ இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. பேட்டிங்குக்கு சிறந்த களத்தில் 145 ரன்கள் என்பது மிகவும் கம்மிதான். அயர்லாந்து அணிக்கு வாழ்த்துகள். அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் செயல்பட்டனர்.

எங்களிடம் சில நேர்மறையான அம்சங்களும் உள்ளன. ஹோல்டர் சிறப்பாக பந்துவீசினார். கிங் சிறப்பாக பேட்டிங் செய்தார். நான் என் அணியை என்னுடைய செயல்களால் அதிருப்தி அடைய செய்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.