சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்!!

0
117
#image_title
சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்!
நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்கவுள்ள 48வது படமான STR48 படத்தில் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பத்து தல திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் அவர்கள் தனது 48வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் நடிக்கும் 48வது படமான STR48 திரைப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கிறார். சுமார் 100 ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா படமாக இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது.
இதையடுத்து நடிகர் சிலம்பரசன் நடிக்கும் STR48 திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிப்பது உறுதியானால் இவர் நடிக்கும் இரண்டாவது தமிழ்படம் இதுவாகும். நடிகை தீபிகா படுகோன் தமிழில் நடித்த முதல் திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
Savitha