10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

0
176
#image_title
10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!
10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20ம் தேதி முடிந்தது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  3,986 மையங்களில் நடத்தப்பட்டது. 3,986 மையங்களில் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர்.
இந்த எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளம் மூலமாகவும், www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அதே நாளில் அதாவது மே 19ம் தேதி அன்றே 11ம் வகுப்பு பொதுத் தெரிவு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளையும் அதே இணையதளங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
Savitha