இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் மீதும் மேலும் சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் மீண்டும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இராகுல் காந்தி அவர்களுக்கும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்ன்ள் தலைவர் இராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் பாஜக கட்சி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இதையடுத்து பெங்களூரூ நீதிமன்றம் மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக அளித்த வழக்கு மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து குற்றம் சாட்டப்பட்ட அமைச்சருக்களுக்கும் இராகுல் காந்தி அவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் ஜூலை 27ம் தேதி வாக்கு மூலம் பதிவு சொய்யப்படவுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி…
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மே 5ம் தேதி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. கார்நாடகத்தில் இருந்த முந்தைய பாஜக அரசு 40 சதவீதம் ஊழல் செய்துள்ளதாகவும் நான்கு ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்ததாகவும் கூறப்பட்டிருந்தது. நாளிதழ்களில் வெளியான இந்த தகவல் உண்மையல்ல என்று பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.கேசவபிரசாத் மே 9ம் தேதி புகார் செய்தார்.
காங்கிரஸ் கட்சி கூறும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. பாரபட்சம் மற்றும் அவதூறு பரப்புவதாகவும், பாஜக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் இருப்பதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.கேசவபிரசாத் அவர்கள் அவருடைய புகார் மனுவில் கூறியிருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலின் பிரச்சாரத்தில் பேசிய இராகுல் காந்தி அவர்கள் எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இராகுல் காந்தி அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இராகுல் காந்தி அவர்களுக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் தனது எம்.பி பதவியை இழக்க நேரிட்டது. இதையடுத்து மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.