பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி! 

0
150
#image_title

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி! 

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெபமாலைபுரம் என்ற பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து  திரும்பிய  அரசு போக்குவரத்து ஊழியர்களான பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனரான ஆறுமுகம் ஆகிய  இருவர் மீதும் மர்ம நபர்கள் பலர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சம்பவத்தன்று காயமடைந்த  பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனர் ஆறுமுகம் என்ற  இருவரும் பலத்த காயமடைந்து  சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தஞ்சை ஜெபமாலைபுரம் நகர போக்குவரத்து கிளையில்  வலியுறுத்தி வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.மேலும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல வாதங்களை முன் வைத்தனர்.

சம்பவத்தை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சு வாரத்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதனையடுத்து காவல் அதிகாரிகள் அவர்களிடம்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

பின்பு அரசு போக்குவரத்து ஊழியர்களால் அந்த போராட்டம் கைவிடப்பட்டது.இதனால் 4 மணிக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் சற்று தாமதமாக 5.30 மணியளவில் இயக்கப்பட்டது.