டிசம்பரில் தான் கண்டிப்பாக விலை குறையும்! மத்திய அரசு பகீர் தகவல்!
தற்போது தக்காளியின் விலை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. அதுவும் பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாம் அன்றாடப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தக்காளி கிலோ 15 ரூபாய்க்கு விற்றது போய், தற்போது 100 மடங்கு அதிகரித்து 150 ரூபாய் வரை விற்று வருகின்றனர்.
ஆனாலும் விவசாயிகளுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை என்று ஒருபுறம் ஆதங்கமும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இடைத்தரகர்கள் மட்டுமே லாபம் சம்பாதிப்பதாகவும் சிலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை சிறிது சிறிதாக சரிந்துள்ளது. 150 ருபாய் ,100 ரூபாய் என விலை சதம் அடித்த நிலையில் தற்போது ஒரு கிலோ 70 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது.
டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் என பல பகுதிகளிலும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அகில இந்திய அளவில் ஒரு கிலோ தக்காளியின் விலை சராசரியாக 67 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டுடன் இந்த விலையை ஒப்பிடும்போது 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தக்காளியின் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிகரித்து வருவதாகவும், அதற்கு காரணம் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக செடிகள் அனைத்தும் அழுகி போய்விட்டது.
அதுவே தக்காளியின் விலையேற்றத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. அங்கெல்லாம் பல ஏக்கர்களில் தக்காளி செடிகள் பயிரிடப்படுகின்றன. ஆனால் இந்த கனமழையின் காரணமாக எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் தொடர்ந்து செடிகள் எல்லாம் அழுகி வீணாகி விட்டன.
வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தற்போது பருவமழை காலம் என்பதன் காரணமாகவும், மழை தொடர்ந்து வருவதன் காரணமாகவும் தக்காளியின் விலை அதிகரித்துவிட்டது.
இருப்பினும் தற்போது இது குறித்து பல அரசியல் கட்சிகளும் பேசி வருகின்றன. பல மீம் க்ரியேட்டர்கள் தக்காளியை வைத்து பல மீம்களை உருவாக்கி வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். இதை தொடர்ந்து டிசம்பர் மாதம் பிறந்தால் வட மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்தொடங்கி விடும். அதன் காரணமாக அப்போது தக்காளி தாராளமாக கிடைக்கும் பட்சத்தில் அதன் விலை குறையத் தொடங்கி விடும் என்றும் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் மாதம் தக்காளி விலை கடந்த ஆண்டு இருந்த நிலைக்கு வந்துவிடும் என்றும், அதே சமயத்தில் வெங்காயமும் கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டு இருந்ததைவிட குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கையின் மூலம் கூறப்பட்டுள்ளது.