நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், கூகுள் போன்ற தேடுபொறிகள் நம் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக மாறிவிட்டன. ஆனால், சில குறிப்பிட்ட தகவல்களை தேடுவது சட்டவிரோதமாகும் மற்றும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தலாம்.
வெடிகுண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்களை தேடுவது இந்தியாவில் சட்டவிரோதம். பாதுகாப்பு அமைப்புகள் இதை கவனித்து, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம். உதாரணமாக, 2012ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள ‘எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்’ நிறுவனம் ‘செபெக்ஸ் 2’ என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்துள்ளது, இது டிஎன்டி வெடிகுண்டைவிட 2.01 மடங்கு சக்தி வாய்ந்தது.
குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தேடுவது இந்தியாவில் கடுமையான குற்றம். போக்சோ சட்டம் (POCSO Act) 2012, 14 இன் கீழ், குழந்தைகள் தொடர்பான ஆபாசத்தை பார்ப்பது, உருவாக்குவது மற்றும் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்திற்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
கருக்கலைப்பு தொடர்பான தகவல்களை தேடுவது இந்தியாவில் சட்டவிரோதம். முறையான மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வது இந்தியாவில் சட்ட விரோதமாகும். இந்த தகவல்களை தேடுவது உங்களை தண்டனைக்கு உள்ளாக்கலாம்.
இந்தியாவில், ஆபாச படங்களை வெளியிடுவது என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவான குற்றமாக கருதப்படுகிறது. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருப்பது, பகிர்வது அல்லது உருவாக்குவது கடுமையான குற்றம். இந்த சட்டங்களை மீறுவது கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தலாம். அதனால், இத்தகைய தகவல்களை தேடுவது, பகிர்வது அல்லது வைத்திருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.