பொது சிவில் சட்டத்தின் வரையறைகள்!! நாடு முழுவதும் வர இருக்கும் கட்டுப்பாடுகள்!!

Photo of author

By Gayathri

பொது சிவில் சட்டத்தின் வரையறைகள்!! நாடு முழுவதும் வர இருக்கும் கட்டுப்பாடுகள்!!

Gayathri

DEFINITIONS OF GENERAL CIVIL LAW!! Restrictions to come across the country!!

இந்திய நாட்டிலேயே முதன் முதலில் பொது சிவில் சட்டத்தை நேற்று ஜனவரி 27 அன்று உத்தரகாண்ட் மாநிலம் அமிலக்கு கொண்டு வந்தது. இந்த திட்டமானது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசானது தற்போது செயல்பட்டு வருகிறது.

பொது சிவில் சட்டத்திற்கான வரையறைகள் :-

✓ திருமணமானவர்கள் தன்னுடைய கணவரை விட்டு மனைவியோ அல்லது மனைவியை விட்டு கணவரோ உயிருடன் இருக்கும் பொழுது மற்றொரு திருமணம் செய்வது தவறு. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

✓ குழந்தை திருமணத்தை தடை செய்யும் நோக்கில் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது பெண் 18 மற்றும் ஆண் 21 என வரையறை செய்யப்பட்டுள்ளது.

✓ எந்த மத அடிப்படையிலும் சடங்குகள் மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அவ்வாறு செய்யப்பட்ட திருமணங்கள் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே அவை செல்லுபடி ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

✓ அதிலும் குறிப்பாக, விவாகரத்து தொடர்பான விஷயங்கள் குறித்தும் எந்தெந்த காரணங்களுக்காக விவாகரத்து பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்தும் இந்த பொது சிவில் சட்டத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிவ் இன் உறவு முறைக்கான சட்ட வரையறை :-

✓ லிவ் இன் உறவில் வாழக்கூடியவர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

✓ பெண்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவருடைய தந்தையின் சொத்து சம உரிமை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ 21 வயதிற்கு உட்பட்டவர்கள் லிவ் இன் உறவில் இருக்க நினைத்தால் பெற்றோர் என்னுடைய அனுமதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ ஒருவேளை ஒரு மாதம் வரை லிவ் இன் உறவிலிருந்து வெளியே தெருவிக்காமல் இருந்தால் கட்டாய சிறகு தண்டனை மற்றும் அபராதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.