மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு!!!

Photo of author

By Savitha

மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு!!!

Savitha

இன்று நடைபெற்ற மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று வருகை தந்தனர்.

இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி பெறும் , வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆண்டுதோறும் 28 கோடிப் பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வருகின்றனர். அதில் 15 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாவிற்கு மட்டும் வருகை தருகின்றனர்.

தமிழகத்தில் சிறந்த மருத்துவம் , குறைந்த விலையில் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான, தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டு கையேட்டினை முதலமைச்சர் இன்று வெளியிட்டார். அந்த கையேட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன .

இதன் மூலம் இடைத்தரகர்களின் தயவு இல்லாமல் பிற நாட்டை சேர்ந்த மருத்துவ சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் , எவ்வளவு கட்டணத்தில் சிகிச்சை பெறலாம் என்ற தகவலை பெற முடியும்.