நில ஆக்கிரமிப்பு விதிகளை பின்பற்றாத தாசில்தாருக்கு 10,000 ரூபாய் அபராதம்-உயர் நீதிமன்ற உத்தரவு!

0
273
#image_title

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் விதிமுறைகளை பின்பற்றாத, தேவகோட்டை தாசில்தாருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

நில ஆக்கிரமிப்பு சட்டபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பட்டால், விதிமுறைகளை பின்பற்றாதா தாசிலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்/ நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மதியாரி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில்,
தேவகோட்டை பகுதியில் நான் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தேவகோட்டை தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நில ஆக்கிரமிப்பு சட்டபடி உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவகோட்டை தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் உத்தரவில், இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் நில ஆக்கிரமிப்பு சட்டத்தின்படி ஆக்கிரமிப்பாளருக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும் அதன் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு மாறாக ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, நில ஆக்கிரமிப்பு சட்டபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பட்டால் விதிமுறைகளை பின்பற்றாதா தாசிலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள்,

இந்த வழக்கில் தேவகோட்டை தாசில்தாருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தொகையை மதுரையில் உள்ள M.S.செல்லமுத்த மன நல காப்பக மையத்திற்கு செலுத்த உத்தரவிட்டு ,வழக்கு விசாரணை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தேவகோட்டை பகுதியில் நான் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தேவகோட்டை தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நில ஆக்கிரமிப்பு சட்டபடி உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவகோட்டை தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.