முதலிடத்தை பிடிக்க போவது யார்.? டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பவுலிங் தேர்வு.!!

Photo of author

By Vijay

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பண்ட் பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 50வது லீக் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில், தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன.

இந்தப்போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை அடையும். அதனால், இரு அணிகளும் முதலிடத்தைப் பெற வரிந்து கட்டுவதால் இன்றைய போட்டி அனல் பறக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி;

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி(கேப்டன்/ விக்கெட் கீப்பர் ), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட், டுவைன் பிராவோ, தீபக் சாஹர்.

டெல்லி அணி;

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிபால் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், அஸ்வின், ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான்.