அருமையான கேரளா தேங்காய் தோசை – எப்படி செய்வது?

0
137
#image_title

அருமையான கேரளா தேங்காய் தோசை – எப்படி செய்வது?

நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. கார தோசை, மசால் தோசை, ஆனியன் தோசை, பூண்டு பொடி தோசை, கேரட் தோசை என்று பல வகைகள் இருக்கிறது.

இதில் ஒன்று தான் தேங்காய் தோசை. இந்த’தேங்காய் தோசையை கேரளா மக்கள் செய்யும் முறைப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் வாய்க்கு ருசியை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 1 கப்

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*வெள்ளை அவல் – 1/4 கப்

*தேங்காய் துருவல் – 3/4 கப்

*தேங்காய் பால் – 1 கப்

*உப்பு – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கப் பச்சரிசி மற்றும் 1/4 கப் வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுத்து அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரிசி ஊரும் கேப்பில் 1/2 மூடி தேங்காய் எடுத்து துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். 3/4 கப் என்ற அளவிற்கு தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதேபோல் 1/2 மூடி தேங்காய் எடுத்து கீத்து போட்டுக் கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் மைய்ய அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த தேங்காயில் இருந்து தனியாக பால் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பவுல் எடுத்து அதில் வெள்ளை அவல் 1/4 கப் அளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரு முறை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அவல் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள அரசி + வெந்தயம் + அவல் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு சுத்து விடவும். அடுத்து தண்ணீருக்கு பதிலாக அரைத்து வைத்துள்ள தேங்காய் பால் ஊற்றி அரசி கலவையை மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்து விடவும். இதை மூடி போட்டு 8 மணி நேரம் ஊற விடவும். 8 மணி நேரம் கழித்து மாவு நன்றாக புளித்து வந்திருக்கும். பிறகு அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள மாவில் ஒரு குழிக்கரண்டி அளவு மாவு எடுத்து தோசை வாரத்துக் கொள்ளவும்.

பிறகு தோசை மேல் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்கு வேக விடவும். பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த தோசைக்கு சட்னி வகைகள் அனைத்தும் சிறந்த சைடிஷாக இருக்கும்.

Previous articleகேரளா ஸ்டைல் “சிக்கன் குழம்பு” – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!
Next articleகுழந்தை பெற்ற பெண்களுக்கு “பிரசவ லேகியம்” – இப்படி செய்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்!!