சுவையான ஈரல் மிளகு வறுவல் – எப்படி செய்யலாம்? வாங்க பார்ப்போம் !

0
38
#image_title

சுவையான ஈரல் மிளகு வறுவல் – எப்படி செய்யலாம்? வாங்க பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

ஈரல் – 1 கிலோ
பட்டை – 2
கிராம்பு – 4
வெங்காயம் – 2 கப் ( பொடியாக நறுக்கியது )
கரம் மசாலா – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி – 2 துண்டு ( பொடியாக நறுக்கியது )
பூண்டு – 20 பல் ( பொடியாக நறுக்கியது )

செய்முறை

முதலில் ஈரலை நன்றாக சுத்தம் செய்து கழுவி, அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஈரல், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இதன் பின்னர் ஒரு பாத்திரததில் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை, மிளகாய் மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இதன் பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமா வதங்கியதும், வேக வைத்த ஈரலை சேர்க்க வேண்டும்.
பின்னர், ஈரலை 5 நிமிடத்திற்கு நன்றாக வதக்க வேண்டும்.
இதன் பின்னர், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா ஆகிவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பின்னர் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஈரல் மிளகு வறுவல் ரெடி.

author avatar
Gayathri