சுவையான தினை பக்கோடா! வாங்க ட்ரை செய்து பார்க்கலாம்!

0
171

சுவையான தினை பக்கோடா! வாங்க ட்ரை செய்து பார்க்கலாம்!

தேவையான பொருட்கள் :தினை மாவு கால் கிலோ, கடலை மாவு 100 கிராம் ,பெரிய வெங்காயம் நான்கு,இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி ,கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை :  முதலில்  கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளமாக இருக்கும் மாறு அரிந்து கொள்ள வேண்டும். முதலில் தினை மாவு, கடலை மாவு ஆகியவற்றை கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்.பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தினை பக்கோடா ரெடிஆகிவிடும்.

 

 

Previous articleகரூர் தொகுதி எம்பி ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா? பாஜக பிரமுகர் கொடுத்த ட்விஸ்ட்
Next articleஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா?