சுவையான இறால் ப்ரைட் ரைஸ் – செய்வது எப்படி?

0
88
#image_title

சுவையான இறால் ப்ரைட் ரைஸ் – செய்வது எப்படி?

கடலில் வாழும் இறாலில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவில் ஆரோக்கியம் பலமடங்கு அடங்கியுள்ளது. மீன் வகைகள் நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. மீனை போல் இறாலும் நம் உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது.

சரி… இறாலில் எப்படி ப்ரைட் ரைஸ் செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

இறால் – 1 கிலோ
வடித்த சாதம்  – 4 கப் ( பாஸ்மதி அரிசி )
வெங்காயம் – சிறிதளவு
கேரட் – அரை கப்
பீன்ஸ் –  அரை கப்
முட்டை கோஸ் – சிறிதளவு
குடைமிளகாய்  – 2
வெங்காயத் தாள்  –  2 கைப்பிடி
எலுமிச்சை சாரு – சிறிதளவு
தக்காளி சாஸ் – அரை  ஸ்பூன்
சோயா சாஸ் – அரை ஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு
எண்ணெய்  – தேவையான அளவு
மிளகு தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் இறாலை போட்டு 8 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனையடுத்து, அதே வாணலியில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு வதக்க வேண்டும்.
காய்கறிகள் பாதி அளவு வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
இதன் பிறகு தக்காளி சாஸ், மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பின்னர், வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பின், வடித்து வைத்துள்ள சாதத்தை போட்டு கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான இறால் ப்ரைட் ரைஸ் ரெடியாகி விடும்.

Previous articleஇதை செய்தால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி மற்றும் முதுகு வலி வராது.. 100%அனுபவ உண்மை!!
Next article21 வகை மூல நோயை குணப்படுத்தும் பானம்!! 7 நாட்களில் தீர்வு நிச்சயம்.. இன்றே தொடங்குங்கள்!!