தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம்!!

Photo of author

By Savitha

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம்!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மல்லிகார்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகம் விளக்கவுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்கி அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுக.

ஓட்டுநர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்திடுக. ஓட்டுநர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடுக. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடுக என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.