கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க வேண்டும். உள்ளிட்ட 11-ம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயில்வே நிலையம் வாயிலில் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொருளாளர், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். அதனை தொடர்ந்து, மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு காலை 8.15 மணிக்கு செல்லும் விரைவு வண்டியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கிட வேண்டும்.
மூட்டு வலியால் நடை மேம்பாலத்தில் ஏற முடியாமல் தினமும் அவதிக்குள்ளாகும் முதியோர் நலன் கருதி அறிவிக்கப்பட்ட பேட்டரி கார்களை உடனே இயக்க வேண்டும். திருவாரூர் அகல ரயில் பாதையை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 3, 4, 5 நடைமேடைகளுடன் விரைவில் இணைத்திட வேண்டும். பயணிகளின் நேரடி தொடர்பிலுள்ள பணியிடங்களில் அந்தந்த மாநில மொழியாளர்களே பணியமர்த்தப்பட வேண்டும்.
கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ரயில்வே தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஏழை எளிய மூத்த குடிமக்கள் பயன்படுத்தி வந்த பாசஞ்சர் வண்டிகளை மீண்டும் இயக்க வேண்டும். மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 11-ம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.