ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி!

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவிற்கு வருகை தந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து  எடப்பாடி கருத்து கூறியுள்ளார்.இவாறு அவர் கூறுவது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரன் சசிகலாவும் தான் என்றும்கூறினார்.

ஓபிஎஸ் என்பவர் இல்லை என்றால் இபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாய் இருக்கும் என்றும், நன்றி இல்லாமல் பேசி வருகிறார் என வைத்தியலிங்கம் குற்றம் சாட்டினார். மேலும் ஆயிரம் எடப்பாடிகள் வந்தாலும் இந்த அதிமுகவே வழி நடத்த முடியாது என்றும் பேசினார்.