பாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! 

Photo of author

By Rupa

பாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!
தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் MP 92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  கடந்த 2021-ல் தமிழக அரசு தள்ளுபடி செய்த விவசாய பயிர் கடன் தள்ளுபடிக்கான நகை மற்றும் நில ஆவணங்களை தற்போதுவரை  கொடுக்கவில்லை.
அதனை தரக்கோரி பாஜக கட்சி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு போராட்டம் நடத்திய BJP கட்சியினர், பொதுமக்களிடம்  (கூட்டுறவு சங்க துணைபதிவாளர்) DR அவர்கள் போனில் பேசியதில் வரும் வெள்ளிக்கிழமை ஒரு வார காலத்திற்குள் மேற்படி பயிர் கடன் தள்ளுபடி சம்பந்தமாக விவசாயிகளுக்கு ரசீது கொடுக்கப்படும் என்று கூறியதின் பேரில் விவசாயிகள் முற்றுகை போராட்டதை கைவிட்டு திரும்பி சென்றனர்.