கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் அசந்தால் உயிரை எடுத்துவிடும். இந்த டெங்கு பாதிப்பு பெருமைப்பாலும் மழைக் காலங்களில் தான் பரவுகிறது. அதாவது ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை இந்த காய்ச்சல் பரவல் தீவிரமாக இருக்கும்.
எனவே மழைக் காலங்களில் வருகின்ற காய்ச்சலை சாதாரண காய்ச்சல் என்று அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி இருந்தால் அதை அப்புறப்படுத்த வேண்டும். தேங்கும் நீரில் கொசுக்கள் முட்டையிட்டு கொசுப் புழுக்களை உற்பத்தி செய்கிறது.
இதனால் டெங்கு,மலேரியா போன்ற காய்ச்சல் அதிகம் பரவுகிறது. கொசுக்கள் மூலம் பல நோய்கள் பரவுகிறது என்றாலும் இதில் கொடிய பாதிப்பாக இருப்பது டெங்கு தான். கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து காணப்படுகிறது.கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு பரவல் அதிகமாக உள்ளது.
டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் பராமரிக்க இருக்க வேண்டும்.
அதேபோல் இரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள்:
1)டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் பசலைக்கீரை மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை அதிகளவு உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2)மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவுகளை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.இதில் இருக்கின்ற குர்குமின் நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது.
3)வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழத்தை உட்கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அது மட்டுமின்றி ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கவும் இது உதவுகிறது.
4)பீட்ரூட்டில் இருக்கின்ற அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். எனவே பீட்ரூட்டை சமைத்தோ அல்லது அரைத்து சாறாகவோ அருந்தி வந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். நட்ஸ், உலர் பழங்களை சாப்பிட்டு வந்தாலும் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.