டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!..
கொசுக்களால் டெங்கு மற்றும் மலேரியா சிக்கன் குனியா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறையாக மாநகராட்சி முழுவதும் இன்று காலை முதல் புகை பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக அதிக கன மழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் அதிக அளவு மழை நீர் தேங்கிவுள்ளது. இதனால் அதிக அளவு கொசு உற்பத்தி பெருக்கமடைகிறது. இதனால் டெங்கு மலேரியா சிக்கன் குனியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுத்தும் அச்சமும் நிலவுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் உற்பத்தி தடுப்பு நடவடிக்கையாக கொசுவை ஒழிக்கும் பணியை மாநகராட்சி இன்று முதல் துவங்கவுள்ளது.இந்நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த சென்னையில் இதுவரை 200 வார்டுகளிலும் மேலும் இன்று முதல் காலை 6 முதல் 7.30 மணி வரை, மாலை ஆறு முதல் ஏழு முப்பது மணி வரை 2 வேலைகளிலும் கொசு ஒழிப்பு புகைப் பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியை தொடர 3437 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். மேலும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள், 245 கையினால் கொண்டு செல்லும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகைப்படமும் இயந்திரங்கள் கொண்டு கொசுவை ஒழிக்கும் பணி நடைபெறுகிறது.
நீர்வழி காய்வாய்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே அதனை அழிக்க வேண்டும்.அதற்கு 225 கைத்தெளிப்பான்கள், 346 பேட்டரி வாயிலாக இயங்கக்கூடிய கைத்தலின்பான்கள் மற்றும் 130 விசைத்தெளிப்பான்கள் வாயிலாக கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கொசு தொல்லை அதிகமாக இருந்தால் மாநகராட்சியின் 19 13 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் டெங்கு ,மலேரியா அறிகுறி இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.