பிரதமர் பொதுக்கூட்டத்தில் அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நமீதா தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.அதன்படி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.அதனை தொடர்ந்து இவருக்கு அடுத்த ஆண்டே மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நடிகை நமீதா பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும், நமீதா வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருறார்.
இப்படி பாஜகவில் முக்கிய நபராக விளங்கி வரும் நடிகை நமீதாவிற்கு பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சார பொதுக்கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதாக இரு தினங்களுக்கு முன்பே நடிகை நமீதா நீலகிரிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்த நடிகை நமீதா விவிஐபி கேட் வழியாக உள்ளே செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர் மக்கள் செல்லும் வழியாக உள்ளே செல்ல முயன்றுள்ளார்.அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரை விவிஐபி கேட் வழியாக செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நமீதா மீண்டும் விவிஐபி கேட் வழியாக செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இப்படியே சிறிது நேரம் அவரை அலைக்கழித்து வந்ததால்,கடுப்பான நமீதா மற்றும் அவரது கணவர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து நமீதாவை விவிஐபி கேட் வழியாக உள்ளே அனுமதித்துள்ளனர்.