அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படும் பொழுது எது எல்லாம் நடக்கக்கூடாது என இந்தியா பயந்ததோ அவை எல்லாம் இப்பொழுது நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் அமெரிக்காவில் படுக்கக் கூடிய தன்னுடைய மகனை காணச் சென்ற பெற்றோரை இந்தியாவிற்கே திரும்பி அனுப்பியது.
இது தொடர்பாக Mirchi9 என்ற ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியானது :-
அமெரிக்காவில் பயிலக்கூடிய தன்னுடைய பிள்ளையை காண்பதற்காக பெற்றோர் இந்தியாவிலிருந்து B – 1/B-2 visitor என்ற விசாவினை பயன்படுத்தி சென்றதாகவும், நியூயார்க் சிட்டி விமான நிலையத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது அமெரிக்காவில் பயிலக்கூடிய தன்னுடைய மகனுடன் ஐந்து மாதங்கள் தங்கி விட்டு செல்வதற்காக இந்திய பெற்றோர்கள் விசா எடுத்து சென்று இருக்கின்றனர். அங்கு அவர்களை தடுத்த அமெரிக்க புலம்பெயர்தல் துறை அலுவலர்கள் 2025 புதிய விதிகளின்படி, ரிட்டன் டிக்கெட் அவசியம் என்றும் அவர்களிடம் ரிட்டன் டிக்கெட் இல்லாத காரணத்தால் அவர்களை உடனடியாக இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறது.
குறிப்பு :-
புலம்பெயர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்த புதிய விதியானது அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று அங்கு பயிலக்கூடிய இந்திய மாணவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.