Dental implant: பல் இம்பிளாண்ட் சிகிச்சை முறை நல்லதா கெட்டதா? முழு விவரம் உள்ளே!!

0
114

நம் முகத்திற்கு அழகு மற்றும் அடையாளத்தை கொடுப்பதில் பற்களுக்கு முக்கிய பங்குண்டு.வலிமையான பற்கள் இருந்தால் தான் எவ்வகை உணவையும் மென்று விழுங்க முடியும்.நம் பற்கள் திடமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.வலிமையான மற்றும் அழகான பற்கள் நமக்கு தன்னம்பிக்கையை தருகிறது.

ஆனால் எல்லோருக்கும் வலிமையாக அழகான பற்கள் இயற்கையாக அமைவதில்லை.பல் சொத்தை,பற்களை சுற்றி காணப்படும் எலும்புகளில் வலிமை குறைதல்,விபத்து போன்ற காரணங்களால் பற்களை இழக்க நேரிடுகிறது.பற்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

அதேபோல் வயது முதுமை மற்றும் உடல் நலக் கோளாறால் பற்கள் வலிமை இழந்து ஆடத் தொடங்குகிறது.சிலருக்கு இளம் வயதிலேயே பற்கள் விழத் தொடங்குகிறது.இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நாம் வருடத்திற்கு ஒருமுறை முழு பல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.விழுந்து முளைத்த பற்கள் ஆடினாலோ அல்லது விழும் நிலையில் இருந்தாலோ அதை நவீன சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் பற்கள் விழுந்தால் பல் செட் வைத்து வைத்துக் கொள்வது வழக்கத்தில் இருந்தது.ஆனால் பல் செட் வைத்தால் கடிமான உணவுகளை சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.அது மட்டுமின்றி அடிக்கடி பல் செட்டை கழட்டி மாற்றும் நிலை ஏற்படும்.இதனால் பல் செட் அணிந்தவர்கள் பெரும் தொந்தரவை சந்தித்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது பற்கள் இல்லாத இடத்தில் செயற்கை பல் பொருத்தப்படுகிறது.டைட்டானியம் என்ற உலகத்தால் செய்யப்பட்ட திருகை ஈறுகளில் பொருத்தி செயற்கை பற்கள் வடிவமைக்கப்படுகிறது.

இந்த டைட்டானியம் திருகு பொருத்தப்பட்ட பல் செட் சில மாதங்களில் வேர் பிடித்துவிடும்.இயற்கை பல் போன்ற அமைப்பு தோன்ற ஆரம்பித்துவிடும்.இந்த சிகிச்சை மூலம் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.பல் இழந்தவர்கள்,பற்கள் விழும் நிலையில் இருப்பவர்களுக்கு இந்த டென்டல் இம்பிளாண்ட் சிகிச்சை உதவியாக இருக்கும்.வயதான பிறகு பெரும்பாலானோர் உடல் நலப் பிரச்சனையால் பற்களை இழக்கின்றனர்.இவர்களுக்கு டென்டல் இம்பிளாண்ட் சிகிச்சை முறை கைகொடுக்கும்.நம் வாழ்நாள் முழுவதும் பற்கள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.அப்படி இருக்கையில் அதன் முறையாக பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.சிறு வயதில் பற்களை இழந்தவர்களுக்கு இந்த டென்டல் இம்பிளாண்ட் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

Previous articleஇந்த உள்ளுறுப்பு சூடானால்.. உங்களுக்கு ஏர் சொட்டை விழும்!! வழுக்கை தலையில் முடி வளர இடுப்பு குளியல் போடுங்க!!
Next articleஎன்னது இத்தனை நாளாக நல்லது என்று நினைத்த கோதுமை.. மாதாவை விட கெடுதல் நிறைந்ததா?