சொத்தைப் பல் பிரச்சனை? கிராம்புடன் இந்த பொருளை சேர்த்து அரைத்து பல்லில் பூசுங்கள்!!

0
150

தற்பொழுது அனைவருக்கும் சொத்தைப்பல் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.பற்களில் அரிப்பு ஏற்பட்டு எளிதில் சொத்தையாகி புழுக்கள் உருவாகிவிடுகிறது.சொத்தைப்பல் இருந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனை அதிகரிக்கும்.அதேபோல் சொத்தைப்பல் இருந்தால் எந்த உணவு சாப்பிட்டாலும் வலி மற்றும் குடைச்சல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

இந்த சொத்தைப்பல் உருவாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.அதிக இனிப்பு உணவுகள் உட்கொள்ளுதல்,முழுமை பெறாத பல் சுத்தம்,உணவு உட்கொண்ட பிறகு வாய் சுத்தத்தை கையாளாமல் இருத்தல் போன்ற காரணங்களால் பல் சொத்தை ஏற்படுகிறது.பல் சொத்தைக்கு சிறந்த வீட்டு மருத்துவக் குறிப்பு ஒன்று சொல்லப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து ஒரு மாதம் முயற்சித்தால் பல் சொத்தையாவது முழுமையாக கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கைப்பிடி
2)கிராம்பு – 25 கிராம்
3)மஞ்சள் கிழங்கு – ஒன்று
4)கொய்யா இலை – பத்து

செய்முறை விளக்கம்:-

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் பல் சொத்தையை போக்கும் அருமருந்தாக திகழ்கிறது.

முதலில் கொய்யா இலை மற்றும் வேப்பிலையை நன்கு வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டும் மொரு மொரு பதத்திற்கு வரும் வரை காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து 25 கிராம் அளவிற்கு இலவங்கம் அதாவது கிராம்பு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெயிலில் காய வைத்த கொய்யா இலை மற்றும் வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.அரைத்த மஞ்சள் தூள்,கிராம்பு தூள்,வேப்பிலை மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக மிக்ஸ் செய்து ஈரமில்லாத டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

கிண்ணம் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணையாக இருந்தால் இன்னும் சிறப்பு.பிறகு அரைத்து வைத்துள்ள ஹெர்பல் பற்பொடியை தேங்காய் எண்ணெயில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை சொத்தைப் பல் துளைகளில் பூசவும்.இந்த பேஸ்ட் பூசிய பிறகு தண்ணீர்,உணவு போன்ற எதையும் அரை மணி நேரத்திற்கு எடுத்துக் கொள்ள கூடாது.இந்த பேஸ்ட் சொத்தைப்பல்லில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகளை அழித்து மீண்டும் பல் சொத்தையாவதை தடுக்கிறது.

தொடர்ந்து இந்த பேஸ்டை பயன்படுத்தி வந்தால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுவதோடு பல் ஆரோக்கியம் மேம்படும்.பல் சொத்தை பிரச்சனை இருப்பவர்கள் இனிப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் சூடான மற்றும் அதிக குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Previous articleஇதய நோய் வாய்ப்பை குறைக்கும் காலை உணவு!! இந்த உணவுகளை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleசிபில் ஸ்கோர் 0 ஆக இருக்கும் பொழுதும் லோன் பெற முடியும்!! வழிமுறைகள் இதோ!!