ரூபாய் மதிப்பு சரிவது இந்தியாவிற்கு நல்லது!! விளக்குகிறார் ஆனந்த் சீனிவாசன்!!

Photo of author

By Gayathri

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னே போதும் இல்லாத அளவிற்கு சரிந்து வருகிறது. இது இது இந்தியாவிற்கு நல்லதில்லை என்று ஒரு தரப்பினர் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, ஆனந்த் சீனிவாசன் அவர்கள் இது நன்மைக்கே என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய மதிப்பு என்பது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.82.98 காசுகளாக இந்திய ரூபாய் இருந்தது. ஆனால் இப்போது ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.45 காசுகளாக இருக்கிறது.

குறிப்பாக தற்பொழுது அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவடைந்து டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறையாக அதிபர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். இவர் அமெரிக்காவிற்கு அதிபராக வரும் பொழுது ரூபாயின் மதிப்பு வேகமாக குறைகிறது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அமெரிக்காவில் டிரம்ப் வந்து விட்டால் டாலர் மதிப்பு உயர்கிறது என்பதாகும்.

இவ்வாறு அமெரிக்க டாலர் உயர்வதால் தான் மற்ற கரன்சி மதிப்பு வேகமாக சரிகிறது. பொதுவாக ரூபாய் மதிப்பு சரிவதால் இந்திய பொருளாதாரம் ஆனது பாதிப்படையும் எனக்கு கூறுவது தவறானது. அதற்கு எதிர் மாறாக இந்தியாவிற்கு இது நன்மையே பயக்கும் என்று பிரபல பொருளாதார வல்லுனர் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்திய ரூபாய் மதிப்பு 86 ரூபாய் வரை போகலாம் என்று கூறியிருக்கிறார். ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டாலருக்கு இணையான இந்திய மதிப்பு 90 ரூபாயை தொடும் என்றும் அவரை எச்சரித்திருக்கிறார். அதேநேரம் இந்திய பொருளாதாரத்திற்கும் ரூபாய் மதிப்பிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கான காரணத்தை அவர் விளக்கியதாவது :-

ரூபாய் மதிப்பை நீங்கள் மட்டும் வலிமையாக வைத்தால் போதாது., சீனா மற்றும் ஜப்பானில் அந்தந்த நாடுகளின் கரன்சி மதிப்பு சரிகிறது. அப்படி இருக்கும்போது இந்தியாவினுடைய ரூபாய் மதிப்பு அதிகமாக இருந்தால் இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு பதிலாக சீனா மற்றும் ஜப்பான் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து பொருட்களை வாங்கிக் கொள்வார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது, வெளிநாடுகள் நமது பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நம்முடைய இந்திய ரூபாயானது மலிவாக இருத்தல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். நாம் இந்திய ரூபாயை மட்டும் தனித்து பார்க்க முடியாது. சீனா ஜப்பான் வியட்நாம் நாடுகளிலும் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் பிரதான போட்டியாளர்கள் என்றும் அவர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.