நிதி நெருக்கடியால் ஏற்படும் மனஸ்தாபம்!! சரிந்து வரும் லைக்கா ப்ரொடெக்ஷன் நிறுவனம்!!

Photo of author

By Gayathri

லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது சினிமா துறையில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் பெரிய பெரிய நடிகர்களை கொண்டு மிகப் பெரிய வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. ஆனால் தற்பொழுது சில காலங்களாகவே பெரிய பெரிய நடிகர்களுடன் நட்பை முறிக்கும் அளவு இவர்களது செயல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் உடனான லைக்கா நிறுவனத்தின் நட்பு முறிவுக்கான காரணம் :-

லைக்கா நிறுவனம் தற்போது அஜித்தின் விடா முயற்சி படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படம் 2025 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் திரைக்கு வரும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த படம் எவ்வளவு தாமதமாவதற்கு நடிகர் அஜித்தான் காரணம் என்று லைக்கா ப்ரொடக்ஷன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், லண்டனில் பிசினஸில் கொடி கட்டி பறந்து வரும் லைகா மூலம் அஜித் அங்கே இடம் வாங்கியுள்ளார். அதில் பிரச்சினை ஏற்பட்டு அவர்களுக்குள் வந்த மனஸ்தாபத்தால் தான் இந்த படம் இவ்வாறு பாதிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் உடனான லைக்கா நிறுவனத்தின் நட்பு முறிவுக்கான காரணம் :-

2014 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் நடிகர் விஜய் அவர்களின் கத்தி திரைப்படம் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை விஜய் அவர்கள் லைக்கா ப்ரொடெக்ஷன் நிறுவனத்திற்கு தன்னுடைய கால் சீட்டை கொடுப்பதில்லையாம். இதிலிருந்து நடிகர் விஜய் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் இடையே ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்பது புலன் ஆகிறது.

தற்பொழுது சமீபத்தில் நடிகர் ரஜினி மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இடையே ஏற்பட்ட விவாதம் :-

லைக்கா ப்ரொடெக்ஷன் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் வேட்டையன். இந்த படத்திற்கு லைக்கா ப்ரொடக்ஷன் 40 கோடி ரூபாய் மட்டுமே நடிகர் ரஜினி அவர்களுக்கு கொடுத்த நிலையில் மீதி பணத்தை கொடுக்கவில்லையாம். இதனால் கோபமடைந்த நடிகர் ரஜினி அவர்கள் இந்த படத்திற்கு டப்பிங் பேச செல்லாமல் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, ஒவ்வொரு நடிகருடனும் தன்னுடைய நட்பை பண நெருக்கடியின் காரணமாக லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் முடித்துக் கொண்டு வருவது இந்நிறுவனத்திற்கான ஆணிவேரை தானே அசைத்துக் கொள்வது போன்று உள்ளதாகவும், மேலும் இது தொடர்ந்தால் இந்நிறுவனத்தை மொத்தமாக இழுத்துப் பூட்ட வேண்டியிருக்கும் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து உள்ளனர்.