Gmail பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!எழுத்துக்கள் எண்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்!!

0
88
Important notice for Gmail users!!Only letters and numbers are recognized!!
Important notice for Gmail users!!Only letters and numbers are recognized!!

ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் அவர்களுடைய பெயரில் தனித்தனியாக மெயில் ஐடி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த மெயில் ஐடி இல்லாதவர்கள் குறைந்த சிலரே.

ஜிமெயில் அக்கவுண்ட் சேவையை கூகுள் (Google) நிறுவனம் இலவமாக வழங்கி வருகிறது. ஆவணப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் செய்திகள் பகிர்வுகள் ஜிமெயில் மூலமே நடக்கின்றன. வாட்ஸ்அப், மெசேஜ் போன்ற கம்யூனிகேஷன் ஆப்கள் இருந்தாலும், ஜிமெயில் அக்கவுண்ட் யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விளங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இப்படி உள்ள ஜிமெயில் முகவரி ஆனது அனைவருக்கும் ஒன்று போல கொடுக்கப்படுவது அல்ல. அதற்கு மாறாக ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான மற்றும் தனித்துவமான மெயில் ஐடி வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், இதில் வரும் புள்ளிகள் (Dots) யூசர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது, ஜிமெயில் முகவரில் புள்ளிகளை வேறு இடத்திலேயோ அல்லது இல்லாமலேயோ ஈமெயில் அனுப்பினால், அது சரியான நபருக்கு செல்லுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது.

இதற்கு காரணம், நாம் அனுப்பக்கூடிய மெயில் ஆனது சரியான நபருக்கு சென்று சேரவில்லை என்றால் அது மிகப் பெரிய பிரச்சினையாக கருதப்படுவது தான். இந்த ஜிமெயிலில் உள்ள ஐடியில் நம் புள்ளிகளை சேர்க்கும் பொழுது இந்த மெயில் ஐடியானது அதில் உள்ள வார்த்தைகளை மட்டுமே கணக்கில் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, [email protected] என்ற ஜிமெயில் முகவரியை எடுத்து கொள்வோம். இதில் முகவரியில் எங்கு டாட் சேர்த்தாலும் ஈமெயில் சரியாக சென்று சேரும். அதாவது,

[email protected]
[email protected]
[email protected] என மெயில் ஐடியில் எங்கு புள்ளி இருந்தாலும் இதற்கான அனுப்பப்படும் மேலானது, [email protected] என்பதையே எடுத்துக் கொள்ளும். எனவே மெயில் ஐடியை பொறுத்தவரை எங்க புள்ளி சேர்க்கப்பட்டாலும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

மேலும், அதேபோன்று மெயில் ஐடிகளில் சேர்க்கப்படும் எழுத்துக்களுடன் எண்கள் இருப்பின் அதையும் கூகுள் ஏற்றுக்கொள்ளும். உதாரணத்திற்கு, [email protected] என்று ஒரு மெயில் ஐடி இருப்பின் அதில் உள்ள நம்பரும் கூகுளால் எடுத்துக் கொள்ளப்படும். இப்படி எடுத்துக் கொள்ளும் பொழுது சரியான முகவரிக்கு நீங்கள் அனுப்பும் மெயில்கள் சென்று சேரும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, இவை அனைத்தும் googleல வழங்கப்படும் இலவச ஜிமெயில் அக்கௌன்ட் கணக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இலவசம் அல்லாத மெயில் அக்கவுண்டுகளுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச அல்லாத மெயில் அக்கவுண்டுகளுக்கு உதாரணமாக, [email protected] மற்றும் [email protected] போன்றவை ஆகும். இதுபோன்ற மெயில் ஐடிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் இவை பொதுவானவை கிடையாது.

இதற்கு முன்னதாக, கூகுள் நிறுவனம் அதனுடைய கூகுள் பே (Google Pay) யூசர்களுக்கு யுபிஐ சர்க்கிள் (UPI Circle) பீச்சரை அறிமுகம் செய்தது. இந்த பீச்சர் மூலம் பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களுடன் உங்களது யுபிஐ அக்கவுண்டை ஷேர் செய்ய முடியும் என்று அறிவிப்பும் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

Previous articleநிதி நெருக்கடியால் ஏற்படும் மனஸ்தாபம்!! சரிந்து வரும் லைக்கா ப்ரொடெக்ஷன் நிறுவனம்!!
Next articleபழைய பேப்பரை எடைக்கு போடும் முறை!! மத்திய அரசுக்கு 2,364 கோடி லாபம்!!