ஈரோடு: கிழக்கு தொகுதி எம்எல்ஏ காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் நடந்த போது ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் போட்டியிட விரும்பினார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் திமுக தலைமை வலியுறுத்தல் படி கடைசி நேரத்தில் இளங்கோவன் போட்டியிட்டார்.
நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காத்திருந்தனர். மக்கள் ராஜன் ஆதி தமிழர் பேரவை தலைவர் முதல்வர் சந்தித்தானர். பின் பேட்டி கொடுத்த ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணிவசமாக மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதனை பற்றி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடர் வேண்டும் என ஸ்டாலின் விரும்புவதால் ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கி விடலாம் என கருதுகிறார்.
ஆனால் துணை முதல்வர் உதயநிதி அமைச்சர்கள் முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, ஆகியோர் திமுக களமிறங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் ஈரோடு மேயர் நாகரத்தினம் மாநகர செயலாளர் இச்சூழலில் ஈரோடு கிழக்கு யாருக்கு என்பது பற்றி சென்னையில் நாளை நடக்கும் செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என அறிவாலம் வட்டாரங்கள் கூறுகின்றன.