SBI வங்கியில் Deputy Manager மற்றும் Manager பணி!! மாதம் ரூ.48,170/- ஊதியம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

0
91
#image_title

SBI வங்கியில் Deputy Manager மற்றும் Manager பணி!! மாதம் ரூ.48,170/- ஊதியம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Deputy Manager (Security) மற்றும் Manager (Security) பணிகளுக்காக மொத்தம் 42 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணி: Deputy Manager (Security) மற்றும் Manager (Security)

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 42 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 25 என்றும் அதிகபட்ச வயது 40 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,170/- முதல் ரூ.63,840/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Merit list

*Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Deputy Manager (Security) மற்றும் Manager (Security) பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இறுதி நாள் 27-11-2023.