தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில் – மாற்று பாதையில் விரைவு இரயில்

சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு இரயில்,  இன்று காலை 3மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை இரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது.

இரயில் இன்ஜினிலிருந்து 3வது பெட்டி முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கியுள்ளது.

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்
தடம் புரண்ட சரக்கு இரயில்

சரக்கு இரயில் தடம் புரண்ட காரணத்தால், அந்த வழியே செல்லும் விரைவு இரயில்களும்,

அதாவது சேலத்திலிருந்து தருமபுரி செல்லவேண்டிய விரைவு இரயிலும்,

சேலத்திலிருந்து ஓசூர் செல்ல வேண்டிய விரைவு இரயில், மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இரயில் வேற்று பாதையில் மாற்றபட்டுள்ளன.

இரயில்கள் வேற்று பாதையில் மாற்றப்பட்டதால், விரைவு இரயில்கள் காலதாமதமாக சென்றுள்ளன.

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்
இந்த கால தாமதத்தால் பயணிகள் 2மணி நேரம் காத்திருந்ததாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இரயில் தடம் புரண்டதை மேல் அதிகாரிகள், மற்றும் மீட்பு பணியினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுன.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடிரென இரயில் தடம் புரண்டதற்கான காரணம் தண்டவாளமா?  அல்லது அதிக சரக்குகள் ஏற்றி சென்றதா?  இரயிலை இயக்கி சென்ற இன்ஜினியரா?  என்று பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.