பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!!
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்தது. இன்று இந்த ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல மர்மங்கள் உள்ளது.
இவரை பரிசோதனை செய்த அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர், இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி ஜெயலலிதா அவர்களின் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வாறு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர் ரிச்சர்ட் பிலோ கூறியுள்ளார். ஆனால் வெளிநாட்டிற்கு ஜெயலலிதா அவர்களை அழைத்துச் செல்ல சசிகலா விடவில்லை.
இதுபோல ஜெயலலிதா அவர்களின் சிகிச்சைக்கு முட்டுக்கட்டையாக சசிகலா இருந்தது இந்த விசாரணை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. தன்னுடைய சுயநலத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும் இவ்வாறு சசிகலா செய்தாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜெயலலிதா அவர்களின் சிகிச்சையின் போது மருத்துவமனையில் சசிகலா உறவினர்களே பெரும்பாலானோர் காணப்பட்டனர்.
இவர்தான் மேல் சிகிச்சைக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்க விடவில்லை என்றாலும் அப்போதிருந்த அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்பொழுது வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை தகவலும் வெளியிடப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.
அதேபோல அவர் நான்காம் தேதி மாலை நேரத்தில் இறந்ததை மறைத்து ஐந்தாம் தேதி என்று ஏன் மாற்றி கூற வேண்டும்?? இதற்குப் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன என கேட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டும் அவர் கூறிய எந்த ஒரு சிகிச்சையும் அளிக்காதது ஏன் இது போல பல கேள்விகள் அடுக்கடுக்காக வைத்துள்ளனர்.ஜெயலலிதாவின் மரண வழக்கில் சசிகலா மீது தான் அதிகளவு குற்றச்சாட்டுக்கள் குவிந்துள்ளது.