இரத்தத்தை சுத்தமாக்கும் டிடாக்ஸ் வாட்டர்!! ஒரு கிளாஸ் குடித்தால் கழிவுகள் வெளியேறும்!!

Photo of author

By Divya

இரத்தத்தை சுத்தமாக்கும் டிடாக்ஸ் வாட்டர்!! ஒரு கிளாஸ் குடித்தால் கழிவுகள் வெளியேறும்!!

Divya

உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சசீராக இருக்க,கழிவுகள் வெளியேற இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)செம்பருத்தி இதழ்
3)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

1.ஒரு காற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு செம்பருத்தி பூவை எடுத்து அதன் இதழை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் மிக்சர் ஜாரில் கற்றாழை ஜெல் மற்றும் செம்பருத்தி இதழை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து இந்த சாறை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சம் பழத்தை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.இந்த ஜூஸை குடித்தால் இரத்தத்தில் இருக்கின்ற நசுக்கி கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிது சூடாகும் வரை காத்திருக்க வேண்டும்.

2.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த மஞ்சள் பானத்தை குடித்தால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் முழுமையாக அகலும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய்
2)நெல்லிக்காய்
3)சீரகம்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு வெள்ளரிக்காயை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு முழு நெல்லிக்காய் எடுத்து அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு மிக்சர் ஜாரில் வெள்ளரிக்காய் மற்றும் முழு நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.இந்த வெள்ளரிக்காய் ஜூஸை குடித்தால் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்.இரத்தத்தில் இருக்கின்ற யூரிக் அமிலம் வெளியேற இந்த ஜூஸை செய்து குடிக்கலாம்.