தேவதாஸ் பட நடிகர் திடீர் மரணம்!  சோகத்தில் திரையுலகம்!

0
181
Devdas film actor dies suddenly Screening in tragedy!
Devdas film actor dies suddenly Screening in tragedy!

தேவதாஸ் பட நடிகர் திடீர் மரணம்!  சோகத்தில் திரையுலகம்!

கொரோனா தொற்றானது ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்கள் பெருமளவு பாதிப்படைந்து வருகின்றனர்.அந்தவகையில் பல உறவுகையும் இழக்க நேரிட்டது.அத்தோடு பல சினிமா பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்து மீண்டு வந்தனர்.இதில் பலர் மீண்டு வரமுடியாமல் உயிரிழந்தனர்.அதில் தமிழ் சினிமாவில் மக்களின் இசை நாயகன் S.P.B அவர்களின் மரணம் இன்றளவும் மறக்கமுடியாமல் உள்ளது.

தற்போது நாம் அனைவரும் வியந்து பார்க்கும் ஜாம்பவான்கள் அனைவரும் உயிரிழந்து வருகின்றனர்.அந்தவகையில் இந்தியின் பழம் பெரும் நடிகரான திலீப்குமார் என்பவர் இன்று காலமானார்.இவருக்கு தற்போது 98 வயதாகிறது.இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மும்பையிலுள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஒரு வாரம் முழுவதும் மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து தங்களின் கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர்.மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காததால் இன்று காலை காலமானார்.

இவர் முதன் முதலில் 1944 ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.இவர் தேவதாஸ்,கங்கா,யமுனா,ஆண் தஸ்தான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிகாரமானதாகவே அமைந்தது.அதனையடுத்து அவருக்கு பால்கே விருது,பத்ம பூஷன்,பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை தந்துள்ளனர்.இவர் வயதான காரணத்தினால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக மூச்சு திணறல் பிரச்சனையும் இருந்து வந்துள்ளது.

மூச்சுத்திணறல் பிரச்சனை தற்போது தீவீரமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.இவரது இழப்பானது பாலிவுட் திரையுலகிற்கு பெருமளவு சோகத்தை தந்துள்ளது.இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தியும் மற்றும் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.இவர் 50 ஆண்டுகளில் 65 படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்று தல தோனியின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்
Next articleமுன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி!