பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங் நேற்று இரவு கைது!

0
139
#image_title

பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங்கை உத்தர் பிரதேச மாநிலம் கான்பூரில் டெல்லி காவல்துறையினர் மடக்கிப்பிடித்து நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

சூப்பர் திருடன் என்று அழைக்கப்படும் தேவிந்தர் சிங் அல்லது பண்டி நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பண்டி சமீபத்தில் டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் என்ற இடத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை அடித்துள்ளான்.

பண்டியிடமிருந்து பெருமளவிலான திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடந்த 2008 ம் ஆண்டு பண்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அபய் தியோல் நடித்த “ஓயெ லக்கி லக்கி ஓயே” என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து பிரபலமான பண்டி 2010 ம் ஆண்டு வழக்கு ஒன்றில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தான் திருந்தி வாழப் போவதாக சபதம் செய்தான்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியிலும் அவன் கலந்து கொண்டான்.

இருப்பினும், ஒரு வருடம் கழித்து, ஒரு கொள்ளையின் போது சிசிடிவி காட்சிகளில் சிக்கிய பண்டி மீண்டும் திருடத் தொடங்கினான்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள என்ஆர்ஐ தொழிலதிபரின் வீட்டில் 2013ல் நடந்த திருட்டு வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

09 ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திய பண்டி 2012 ம் ஆண்டுவரை நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி விகாஸ்புரியை சேர்ந்த பண்டி ஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்றதால் தனது தந்தையால் தாக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

1993 ம் ஆண்டு 14 வயதில் பண்டி தனது முதல் திருட்டை மேற்கொண்டதை மேற்கொண்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவனை கைது செய்தனர்.

இருப்பினும் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பிய பண்டி டெல்லி ஜலந்தர் சண்டிகர் பெங்களூரு ஹைட்ரபாத் கேரளா சென்னை போன்ற இடங்களில் பலமுறை கொள்ளை அடித்து காவல்துறையின் பிடியிலிருந்து தப்பியுள்ளான்.

பண்டிக்கு கொள்ளையடிப்பதில் அவனுக்கென்றே தனி பாணி உண்டு.

வழக்கமாக அதிகாலை 2 மணி முதல் 6:00 மணி வரை மட்டுமே கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பண்டி கூட்டாளிகள் யாரையும் சேர்த்துக் கொள்ளாமல் தனியாக மட்டுமே கொள்ளை அடிப்பதை தனது பானியாக கொண்டுள்ளான்.

சொகுசு கார்கள் விலை உயர்ந்த கடிகாரங்கள் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள பண்டி சொத்துக்கள் எதையும் வாங்காமல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதோடு பணம் தீர்ந்த பின்னர் மீண்டும் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான்.