குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை கொத்தாக அள்ளப்போகும் எடப்பாடியார்… அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Photo of author

By CineDesk

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் பட்டியலில் இருக்கும் பள்ளர்,குடும்பர், கடையர், காலாடி, பண்ணாடி, தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளும் இனிமேல் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே உட்பிரிவின் கீழ் அழைக்கப்படும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.

Edappadi palaniswami

குடும்பம், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படவேண்டும் என்ற மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில அரசின் பரிந்துரையை ஏற்று தமிழகத்திற்கான ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவானது இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆதிதிராவிடர் உட்பிரிவில் ஆதிதிராவிடர் பட்டியலின் உட்பிரிவில் தேவேந்திர குல வேளாளர் இடம் பெறுவதால் பட்டியலின மக்களுக்கான சலுகைகள் அப்படியே தொடரும் என்று மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. தற்போது அந்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெற்றதையடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ளது. அங்கு ஒப்புதல் கிடைத்த பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின்னர் மசோதா சட்டமாகும், அதன் பின்னர் தேவேந்திர குல வேளாளர் அரசாணை அரசிதழில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.