சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!! ஆனால் பல கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது!!

Photo of author

By Vinoth

சதுரகிரி: கார்த்திகை பிரதோஷம், அமாவாசகைக்கு சதுரகிரி போக அனுமதி.  

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர்களின் சொர்க்க பூமி என்ற பெருமைக்குரிய இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், எல்லா நாளும் நாம் அங்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

அதிலும் குறிப்பாக ஆடி, தை, புரட்டாசி மகாளய அமாவாசை அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு சாமி தரிசனம் செய்வார். அந்த வகையில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்குப் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மலையேறி தரிசனம் செய்து கொள்ளலாம்.

இந்த கோவிலுக்கு செல்ல பல கட்டுபாடுகள் வனத்துறையினர் கூறியுள்ளனர். அவை மலையில் இரவில் தங்க அனுமதி இல்லை. நீர் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. பாலித்தீன் பை, மது, போதை பொருள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.