வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Rupa

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

கரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. குறிப்பாக முதல் அலையில் கொரோனா  தொற்றின் பாதிப்பை அதிக அளவு உணரவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் மக்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.எந்த அளவிற்கு என்றால் க,ரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் இறுதி சடங்கு செய்வதற்கு இடமே இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி போதுமான அளவு மருத்துவமனைகள் இன்றியும், ஆக்ஸிஜன் வசதிகள் இன்றியும் பெருமளவு துயரத்தில் உள்ளனர்.

இரு மாதங்களுக்கு முன்பு சாலை எங்கிலும் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டபடி இருந்தது.மக்களை மீட்க  மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டதால் அதன் தாக்கம் தற்போது  குறைத்துள்ளது. மேலும் அடுத்தடுத்து வரும் அலைகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கூறி வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் இறுதியில் மேலும் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் மூன்றாவது அலை கோரத்தாண்டவம் எடுத்து ஆடும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

அதன் பொருட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூட கோரி தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி சேலம் கோயம்புத்தூர் திருப்பூர் போன்ற பகுதிகளில் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகிறது என்பதால் அப்பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளனர். அந்த வகையில் வேளாங்கண்ணி திருவிழா நடைபெறும் பொழுது  ஏராளமான பக்தர்களுடன் கோலாகலமாக கொண்டாடப்படும்.அதேபோல இந்தாண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவில் வெளிமாவட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பக்தர்கள் யாத்திரை மூலமாகவும் வந்து கலந்து கொள்வது வழக்கம்.

தற்பொழுது கொரோனா தொற்று  அதிக அளவு அதிகரித்து வருவதால் பக்தர்கள் யாரும் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். மக்கள் அதிகம் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் பக்தர்கள் அனைவரும் இவ்வருடம் திருவிழாவை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக திருவிழாவை கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். அதே போல ஏதேனும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வந்துகொண்டிருந்தால் அவர்கள் சொந்த ஊருக்கே திரும்பி செல்ல வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.இந்த அதிரடி உத்தரவை கண்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாததை எண்ணி கவலைக்கொண்டுள்ளனர்.