நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

0
115

கொரோனா வின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜை மற்றும் நடந்து வந்தது.

இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அறிவித்தது. இதையடுத்து கோயில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், ஸ்தல சயனப் பெருமாள், கல்யாண பெருமாள் கந்தசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் திறக்கப்பட்டு பக்தர்கள் நேற்று அதிகாலையில் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் காமாட்சியம்மன் ஏகம்பரநாதர் மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராமர் உள்ளிட்ட கோயில்களில் திறக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் வீரராகவ பெருமாள் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

Previous articleநாளைமுதல்… கால்நடை மருத்துவக் கல்லூரி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
Next articleமாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை “சனியன் “”லூசு” என திட்டிய அரசு பெண் ஊழியர்!