தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

Photo of author

By Savitha

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

Savitha

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

4 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார்.

அனைத்திந்தியா நிறுவனத்தில் ஆறு மாதக் கால ‘மாற்று மருத்துவத்தை’ படித்த 61 பேர் எந்தவித சட்ட இடையூறுமின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த 61 மனுதாரர்களும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு மாத காலம் மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராக சிகிச்சை அளிக்கும் இவர்களை நம்பமுடியாது எனவும் மருத்துவ கவுன்சிலில் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யாத மாற்று மருத்துவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு இது குறித்து சுகாதார துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பினார்.

இந்த நிலையில் நேற்று தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் சுகாதார துறை இணை இயக்குனருடன் போலீசார் நடத்திய விசாரணையில், நான்கு டாக்டர்கள் போலியாக செயல்பட்டது தெரியவந்தது.

பின்னர் இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.