நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!

0
178
#image_title

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!

நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜாவின் விரல்களை துண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம் நாகையில் பேட்டி.

கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அச்சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று நாகையில் நடைபெற்றது.

அப்போது கூறிய தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு.பாலசுப்பிரமணியன், நியாய விலை கடை பணியாளர் சங்க மாநிலதலைவர் ஜெயச்சந்திரன் ராஜாவை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து, நாளை (8ம் தேதி) முதல் நியாய விலை கடை பணியாளர்கள் ரேஷன் கடைகளை அடைத்து மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் பணியாளர்களை தரைக்குறைவாக பேசும் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்க இணை பதிவாளரை கண்டித்து வரும் 12-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள பணியாளர்களை ஒன்றிணைத்து நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது என்றும் அவர் கூறினார்.

author avatar
Savitha