கெட்டப் மாற்றத்தோடு கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கும் தனுஷ்!

0
138

கெட்டப் மாற்றத்தோடு கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கும் தனுஷ்!

தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

நடிகர் தன்ஷ், தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் வில்லனாக நடித்தார் தனுஷ். இந்த திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இப்படி பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்துக்காக தனுஷ் நீண்ட தலைமுடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.