விஜய்க்கு வில்லனாகப் போகும் ஆக்‌ஷன் கிங்… லோகேஷ் படத்தில் இணையும் மெகா கூட்டணி

0
326

விஜய்க்கு வில்லனாகப் போகும் ஆக்‌ஷன் கிங்… லோகேஷ் படத்தில் இணையும் மெகா கூட்டணி

பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குனர் லோகேஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதுபோல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவரான அர்ஜுனிடமும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

அர்ஜுனும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுனைதான் அணுகினார். ஆனால் அதில் நடிக்காமல் வாய்ப்பை தவறவிட்ட அர்ஜுன் இந்தமுறை அதை தவறவிடமாட்டார் என சொல்லப்படுகிறது.

Previous article“மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்…” ப்ரமோஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கோபம்!
Next articleகெட்டப் மாற்றத்தோடு கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கும் தனுஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here