திருச்சிற்றம்பலம்… உற்சாகத்தில் திரையைக் கிழித்த ரசிகர்கள்? பிரபல திரையரங்கில் நடந்த சம்பவம்!

Photo of author

By Vinoth

திருச்சிற்றம்பலம்… உற்சாகத்தில் திரையைக் கிழித்த ரசிகர்கள்? பிரபல திரையரங்கில் நடந்த சம்பவம்!

Vinoth

திருச்சிற்றம்பலம்… உற்சாகத்தில் திரையைக் கிழித்த ரசிகர்கள்? பிரபல திரையரங்கில் நடந்த சம்பவம்!

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடி தியேட்டர் ரிலீஸ் படமாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தாத்தா, தந்தை & மகன் ஆகியோருக்கு இடையிலான பாசப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பாசப் போராட்டமே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார். சில கருத்து வேறுபாடுகளால் சில ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாத தனுஷ் மற்றும் அனிருத் காம்பினேஷன் இந்த படம் மூலம் இணைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் இன்று படத்தை மிகவும் ஆர்வமாக பார்த்த ரசிகர்கள் பாடல் ஒன்றுக்கு திரைக்கு அருகே சென்று நடனமாடியுள்ளனர். அப்போது திரை எதிர்பாராத விதமாக திரைக் கிழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக திரையரங்க நிர்வாகம், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.