தனுஷ் பட நடிகரை காவு வாங்கிய கொரோனா!

Photo of author

By Kowsalya

நாடு முழுவதும் பரவி கொரோனாவில் உயிரிழந்தோர் பலர். தினம் தினம் மக்களை சாவிற்கு அழைத்துச் சென்று பயமுறுத்தி வருகிறது இந்த கொரோனா.

புதுப்பேட்டை ,அசுரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் நிதீஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.சினிமா துறையை பொறுத்தமட்டில் தினமும் யாராவது ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம்  அவரை தொடர்ந்து பாண்டு, நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், நடிகர் குட்டி ரமேஷ், என கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இப்பொழுது நடிகர் நிதிஷ் வீரா உயிரிழந்துள்ளது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது இழப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் புதுப்பேட்டை, அசுரன், காலா போன்ற படங்களில் நடித்த தனது தனித் திறமையை வெளிக்காட்டியுள்ளார். சாகும் வயது இல்லை என்றாலும் கொரோனா இவரை கொன்று விட்டது என்றே கூறலாம்.